திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தி எம்.பி பிறந்த நாளை முன்னிட்டு திருவானைக்காவல், திருவரங்கம், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், நத்தர்ஷா பள்ளிவாசல், மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயம், ஜங்ஷன் வழி விடு முருகன் கோவில் ஆகிய வழிபாட்டு தலங்களில் ராகுல் காந்தி பிறந்த நாளை ஒட்டி சிறப்பு வழிபாடு நடத்தி இனிப்பு வழங்கப்பட்டது .அதை தொடர்ந்து திருச்சி மாநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளில் காங்கிரஸ் கொடியேற்றி இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமையில் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் ரத்ததான முகாம் இன்று நடந்தது. முன்னதாக ராகுல் காந்தி பிறந்தநாளை ஒட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், திருச்சி மாநகர செயலாளர் மண்டல குழு தலைவர் மதிவாணன், மதிமுக துணை பொது செயலாளர் டாக்டர் ரொகையா, மதிமுக பகுதி செயலாளர் ஆசிரியர் முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் கபிபுர் ரகுமான்,

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் அகமது,, மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன், முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன், கவுன்சிலர் கமால் முஸ்தபாதிருச்சி மாநகர் மாவட்ட பொருளாளர் முரளி, காங்கிரஸ் கோட்டத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய் , பிரியங்கா பட்டேல், மலர் வெங்கடேசன். வெங்கடேஷ் காந்தி, அழகர், இஸ்மாயில்,எட்வின் ராஜ்,வடிவேல் அண்ணாதுரை,மீனவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வக்கீல் தனபால், .ஐ.டி. பிரிவு லோகேஷ்,அரிசி கடை டேவிட், விஜய் பட்டேல்,ஊடகப்பிரிவு செந்தில்,எழிலரசன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியை நிர்வாகிகள் தொண்டர்கள்திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *