திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மாணவ – மாணவிகள் கலந்து கொள்ளும் ” மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு ” என்ற தலைப்பின் கீழ் கட்டுரை போட்டியும் , ” காவல் பணிகள் ” என்ற தலைப்பின் கீழ் ஓவியப் போட்டிகளை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

 இந்த கட்டுரை போட்டியில் 15 மாணவ – மாணவிகளும் , ஓவியப்போட்டியில் 55 மாணவ – மாணவிகளும் என 70 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர் . மேற்படி கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்ற முதல் 3 மாணாக்கர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பரிசுகளையும் , வாழ்த்துகளை வழங்கினார் .

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர தலைமையக காவல் துணை ஆணையர் , ஆயுதப்படை கூடுதல் காவல் துணை ஆணையர் , கே.கே.நகர் காவல் சரக உதவி ஆணையர் மற்றும் கே.கே.நகர் அரசு உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்