நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலினை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இரண்டாம்கட்டமாக நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் , 2022 பணிகளுக்கான , வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு திருச்சி கேம்பியன் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது . இப்பயிற்சி வகுப்பில் 3786 அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர் . மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்து நேரடி செயல் விளக்கம் மற்றும் Power Point Presentation வழி பயிற்சி அளிக்கப்பட்டது . இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் தங்களது தபால் வாக்கு படிவங்களை பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர் . திருச்சிராப்பள்ளி கேம்பியன் மேல்நிலைப்பள்ளி , முசிறி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , துறையூர் சௌடம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் இன்று இரண்டாம்கட்டமாக நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் . இந்நிகழ்வுகளில் , மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் , தேர்தல் நடத்தும் அலுவலர்கள் , உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் , உள்ளுர் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் தொடர்பு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்:- 

உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட உள்ளது. குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள 1282 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா வைக்கப்படவுள்ளது. மேலும் திருச்சி மாநகர், புறநகர் காவல் துறையால் குறிப்பிடப்பட்டுள்ள 151 பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராவுடன் கூடுதலாக வெப் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. என கலெக்டர் சிவராசு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *