திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் இப்ராம்ஷா தலைமையில் திருச்சி மலைக்கோட்டை சரக்கு பாறை அருகே நடைபெற்ற இந்த கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில்..திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன், அவைத் தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன், மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, பகுதி கழக செயலாளர் அன்பழகன், மாணவரணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேசும்போது… ஒரு அமைச்சர் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கி இலாக்கா இல்லாத அமைச்சராக சிறையில் உள்ளார். இந்தியாவிலே மாநில அமைச்சர் சிறையில் உள்ளார் என்றால் அது திமுக ஆட்சியில் தான், அமைச்சர் பதவியை எடுத்தால் தான் அவரை கைதியாக நடத்த. முடியும் ஆனால், அவர்கள் அமைச்சர் பதவியை பறிக்காமல் திராவிட மாடல் என கூறி ஏமாற்றி வருகின்றனர்.

சென்னையில் வெள்ளம் வந்த போது 4000 கோடிக்கு கணக்கு கேட்டல் மத்திய அரசு 5000 கோடி கொடுத்தால் பதில் செல்கிறேன் என்கின்றனர் இது தான் திராவிட மாடல்.மோடி திருக்குறளை பேசுகிறார், பாரதி விழாவை போற்றுகிறார் எல்லா இடங்களிலும் தமிழில் பேசுகிறார். ஶ்ரீரங்கம் வந்த பிரதமர் மோடி 3500 ஆண்டு கால தமிழை இந்திய ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார் என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *