திருச்சி தேசிய கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகள் திருச்சி மாவட்ட ஜிம்னாஸ்டிக் அமச்சூர் சங்கத்தின் சார்பில் இன்று நடைபெற்றது.

இந்த ஜிம்னாஸ்டிக் போட்டிகளில். தரைப்பயிற்சி, சமநிலை சட்டங்கள், கிடைமட்ட பட்டை, பொம்மல் குதிரை, ஒற்றைத்தூண், சமநிலையற்ற சட்டங்கள், காலான் மேடை, இதில் 5வயது முதல் 8 வயது வரை உள்ள மாணவ மாணவிகளும், அதேபோல் ஜிம்னாஸ்டிக் தரைப்பயிற்சி, டேபிள் வால்ட், 2 போட்டிகளில் 9&10 வயது மாணவர்களும், தரைப்பயிற்சி, டேபிள் வால்ட், மஸ்ரூம் 3 போட்டிகளில் 9&10 வயது மாணவிகளும், தரைப்பயிற்சி, டேபிள் வால்ட்,பேலன்ஸ் பீம், 3 போட்டிகளில் அனைத்து மாணவிகளும் பங்கேற்றனர்.

தரைப்பயிற்சி, டேபிள் வால்ட்,பேலன்ஸ் பீம்,அன் ஈவன்ட் பார், 4போட்டிகளில் அனைத்து மாணவர்களும்,. தரைப்பயிற்சி, டேபிள் வால்ட்,பேரலல் பார், ஹை பார், ஸ்டில் ரிங்ஸ், பம்மல் குதிரை, 6 போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கேடயங்கள் பதக்கங்கள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டியில், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்