திருச்சி பொன்மலை ரயில்வே படிப்பக மன்றத்தில் திருச்சி மாவட்ட தடகள சங்கமும், கோல்டன் அத்லெடிக் கிளப்பும் இணைந்து நடத்தும் திருச்சி மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜு தலைமையில் நடைபெற்றது..

விழாவில் முன்னாள் செயலாளர் எஸ்.ரெங்காச்சாரி வரவேற்பு ஆற்றிட திருச்சி மாவட்ட தடகள சங்க பொருளாளர் ரவிசங்கர், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், கோல்டன் தடகள மன்ற செயலாளர் ராஜேந்திரன், பரணிதேவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக IPS மயில்வாகனம் கலந்து கொண்டு கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த பயிற்சி முகாமில் பங்கேற்ற 80-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கங்கள் மற்றும் சிறப்பு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் கோல்டன் தடகள மன்ற ரமேஷ், அந்தோணிராஜ், பத்மபிரியா, முஸ்தபா, மோகன், முன்னாள் , இந்நாள் வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள். முடிவில் திருச்சி மாவட்ட தடகள சங்க துணைச் செயலாளர் எம்.கனகராஜ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *