திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவானைக்காவலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆசீர்வாதம் ஆச்சாரியா தனது சிறப்புரையில் பேசியதாவது : கவர்னரின் கட்டளைக்கு மாறாக ஒருமாநில அரசு நடந்து கொண்டால் 355வது சரத்தை பயன்படுத்தி அந்தமாநிலஅரசின் நடவடிக்கைகளை கட்டிப்போட்டு வைக்க கூடிய உரிமை, கடமை, மத்திய அரசுக்கு உள்ளது.

2014ல் பிரதமர் நரேந்திரமோடி பொறுப்பேற்றபின் மக்களுக்கு வழங்கப்படும் மானியம் புரோக்கர்களுக்கு போகாமல் முழுமையாக மக்களுடைய வங்கி கணக்கில் நேரடியையாக வரவு வைக்கப்பட்டது. தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்வதனால் பாஜக ஒன்பது ஆண்டுகாலமாக நல்லாட்சி புரிந்து வருகிறது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சொந்த வீடு வழங்க வேண்டும் என்பது பிரதமரின் ஆசை. தேசிய அளவில் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டன. இதுவரை தமிழக மக்களுக்கு 8 லட்சம் வீடுகளை வழங்கி உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன், மாநிலஇணைப்பொருளாளர் சிவசுப்ரமணியம் மாவட்ட பொதுச்செயலாளர்கள் தண்டபாணி, ஒண்டிமுத்து, காளீஸ்வரன், மாவட்ட பொருளாளர் செல்வதுரை உள்பட பாஜகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட துணைத்தலைவர் ஜெயகர்ணா வரவேற்றார். முடிவில் ஸ்ரீரங்கம் மண்டல் தலைவர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *