திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட எதுமலையிலிருந்து பேரகம்பி வரை வனத்துறை சாலைகள் அமைத்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகின்றது எனவே பல விபத்துகள் ஏற்படுகிறது இதனை கருத்தில் கொண்டு சாலை வசதி அமைத்து தர வேண்டும் .

விவசாய நிலங்களை சேதப்படுத்தும் குரங்கு, காட்டுப்பன்றி, மான், மயில் போன்றவற்றை வனத் துறையினர் கட்டுப்படுத்த கோரியும் வன விலங்குகள் ஊர் பகுதியில் புகா வண்ணம் சோலார் மின் வேலி அமைக்க வேண்டும்

காட்டு விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் விலங்குகள் சாப்பிடும் வகையில் மரக்கன்று நட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

பிஜேபி மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன், தலைமையில் விவசாயிகள் அணி தலைவர் சசிகுமார், பொதுச் செயலாளர் இளங்கோவன், துணைத் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட பெருகம்பி எதுமலை வாலையூர் பாளையூர் சிறுகனூர் பொதுமக்கள் இணைந்து திருச்சி மாவட்ட வனத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *