திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டார். திருச்சி மாவட்டத்தில் 11,37,113 ஆண் வாக்களர்கள், 12,04,743 பெண் வாக்களர்கள் மற்றும் 263 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 23,42,119 வாக்காளர்கள் உள்ளனர். ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிகப்பட்சமாக 3,11,877 வாக்காளர்கள் உள்ளனர்

13, 14.11.2021 சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் 27.11- 22.11.2021 ஆகிய தேதிகளிலும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அங்கு 18 வயது நிரம்பியவர்கள் அதாவது 31.12.2003 அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் படிவம் பூர்த்தி செய்து இருப்பிடத்திற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் அயல்நாடுகளில் வாழ் வாக்காளர்கள் படிவம் 6 A பதிவு அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம். இதேபோல் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டங்களில் சரிபார்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *