திருச்சிராப்பள்ளி ஆனைக்கா இன்ஸ்பயர் லைன் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் மருத்துவமனை சார்பில் திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரில் உள்ள சமுதாய கூடத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

 இம்மு முகாமில் கன்பூரை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் விழித்திரையில் ஏற்படும் பாதிப்புகள் கண்ணீர் அழுத்த நோய் குழந்தைகளின் கண் நோய் மற்றும் கிட்ட பார்வை தூர பார்வை வெள்ளெழுத்து போன்றவற்றிற்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

 மேலும் இதில் கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நபர்களுக்கு மதுரைக்கு தனியாக பேருந்தில் அழைத்து சென்று இலவசமாக கண் அறுவை சிகிச்சையும் லைன் சங்கம் சார்பில் செய்யப்பட உள்ளது.

மாவட்ட ஆளுநர் பாலமுருககுப்தா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் திருச்சிராப்பள்ளி ஆணைக்காயின் ஸ்பேர் லைன் சங்கம் தலைவர் விஜய் ஆனந்த் செயலாளர் மனோஜ் குமார் துணை செயலாளர். பொருளாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் ராமகிருஷ்ணன் பத்மநாபன் முத்துக்குமரன் பக்ரிசாமி முருகானந்தம் சுந்தர் யுகபாரதி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர் முகாமில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *