திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில்‌ இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி மேயர் தீண்டாமை உறுதிமொழி வாசித்தார் அதனைத் தொடர்ந்து கூட்டம் ஆரம்பித்ததும் திருச்சி மாநகராட்சி 63 வது வார்டு கவுன்சிலர் பொற்கொடி பேசத் தொடங்கினார்.

அப்போது அவர் கையில் வைத்திருந்த ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை எடுத்து மேயரின் தவாலியிடம் கொடுத்து மேயரிடம் கொடுத்தார் மேயர் அன்பழகன் அதை வாங்கி திறப்பதற்கு முற்பட்டார் அப்போது அவர் கவுன்சிலர் பொற்கொடியை பார்த்து எனக்கு மட்டும் ஏன் தனியாக ஸ்வீட் தருகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு கவுன்சிலர் பொற்கொடி எங்கள் வார்டு பகுதி மக்களின் கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி தரவில்லை எங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தவே உங்களுக்கு நான் அல்வா தருகிறேன் என்று கூறினார். உடனே மேயர் அன்பழகன் ஸ்வீட் பாக்ஸை திறக்காமல் அப்படியே வைத்துவிட்டார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்