திருச்சி கல்லுக்குழி பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம் அந்த இடம் ரயில்வேக்கு சொந்தமானது என்று கூறி உடனடியாக இடத்தை காலிசெய்ய வலியுறுத்தி அறிக்கை அனுப்பி உள்ளது.

 ஆனால் இந்த இடம் ரயில்வேக்கு சொந்தமானது அல்ல இது தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம் எனவே இதில் நாங்கள் நூறு வருடங்களுக்கு மேலாக குடியிருப்பதால் நாங்கள் காலி செய்ய மாட்டோம் என தெரிவிக்கின்றனர்.

 மேலும் இது தொடர்பாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்திற்கு சென்று மனு அளிக்க சென்றனர் ஆனால் கோட்ட அலுவலர் மனுவை வாங்காததாலும் பேச்சுவார்த்தைக்கு வராததாலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ளே புகுந்து ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு மாநில காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு காவல் துறையினரும் அவர்களை அப்புறப்படுத்தினர்

தொடர்ந்து போராட்டக்காரர்கள் ரயில்வே ஜங்ஷன்நுழைவு வாசலில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தினமும் 100 மேற்பட்ட ரயில்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் இடம் என்பதால் இவ்விடம் மிகவும் பரபரப்பாக காணப்படும் . இந்நிலையில் ரயில்கள் எதும் வராத காரணத்தால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்