மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளை மீண்டும் இயக்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திருச்சி ரயில்வே டிஆர்எம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த முற்றுகை போராட்டத்திற்கு மாநில செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார். 

மாற்றுத்திறனாளிகள் நடத்திய முற்றுகைப் போராட்டத்தின் கோரிக்கைகளாக :- 

ரயில் பயணத்தின்போது மாற்றுத்திறனாளிகள் நெரிசலில் பயணம் செய்ய முடியாது என்பதாலும், பயணங்களில் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற சட்ட விதிகளின் அடிப்படையில் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனாவை காரணம் காட்டி கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளாக பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகளை பயணம் செய்ய அனுமதிக்கா வில்லை. மேலும் அனைத்து யுடிஎஸ் கவுண்டர்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகை பயணச்சீட்டு உடனடியாக வழங்கிட கோரியும், ஆன்லைன் முன்பதிவுக்கு தனியான அடையாளச் சான்று வாங்க சொல்லி சட்டவிரோதமாக அளிக்கப்படுவதை நிறுத்தக் கோரியும், அனைத்து ரயில் நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் வண்டிகளை நிறுத்த கட்டணமின்றி சிறப்பு பார்க்கிங் வசதியை உருவாக்கி தரக்கோரியும்,

ரயில்வே நடைமேடை பேட்டரி வண்டிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க கூறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே ஜங்ஷன் டிஆர்எம் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டு தற்போது தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்