திருச்சி ரெயில் நிலையத்தில் இன்று காலை பயணிகள் பாதுகாப்பு குழு அதிகாரிகள் ஜெயந்திலால் , ஜெயின் , பிரமோத் குமார்சிங் , மோகன்லால் ஆகியோர் தலைமையிலான குழு திடீரென ஆய்வில் ஈடுபட்டனர் . அப்போது ரெயில் பயணத்தின்போது பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் படும் வகையில் வசதிகள் உள்ளதா ? பயணிகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா ? என்று ஆய்வு நடத்தியதோடு , ரெயில் தண்டவாளத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் . அதனைத் தொடர்ந்து அவர்கள் நிலைய மேலாளர் அலுவலகத்திற்குச் சென்று பயணிகளுக்கும் , அதிகாரிகளுக்கும் இருக்கவேண்டிய நல்லுறவுகள் குறித்து அறிவுரை வழங்கினர் . இந்த ஆய்போவின் போது பா.ஜ.க. திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் , மாவட்ட துணைத்தலைவர் ஜெயகர்ணா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்