திருச்சி ரேசிங் புறா கிளப் சார்பில் மாநில அளவிலான ஒப்பன் புறா பந்தயம் கடந்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி நடைபெற்றது, 250, 300, 400, 500கிமீ மற்றும் 1500கிமீ தூரத்திற்கான பல பிரிவுகளில் தொலைதூர புறாபந்தய போட்டி நடத்தப்பட்டது. மாநில அளவிலான புறா பந்தயத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து புறா வளர்ப்பவர்களும் போட்டியில் பங்கெடுத்துக்கொண்டனர். புறாக்களை பெட்டியில் அடைத்து கார் அல்லது ரயில் மூலமாக சென்று வேறு ஒரு இடத்தில் விட்டு விடுவார்கள், குறிப்பிட்ட காலத்தில் மீண்டும் புறாக்களை வளர்த்தவர்கள் வீட்டிற்கு வந்தடைய வேண்டும் என்பது விதி, அதன்படி பந்தய தூரத்தை குறித்த காலத்தில்,
அதற்கு முன்னதாக வந்த புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்படும். திருச்சியில் நடைபெற்ற 35ம் ஆண்டு புறாபந்தயத்தில் பங்கேற்று வெற்றிபெற்ற புறாக்களுக்கான பரிசளிப்பு விழா காந்திமார்க்கெட் சாலை பகுதியில் உள்ள டிஎம்ஆர் மகாலில் நடைபெற்றது. திருச்சி ரேசிங் பீகான் கிளப் தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆல் மெட்ராஸ் ஹோமிங் கிளப் தலைவர் தன்சிங், திருச்சி ரேசிங் பீகான் கிளப் செயலாளர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகைகள், வெள்ளி நாணயங்களை வழங்கினர்
இதில் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இருந்து பறக்கவிடப்பட்ட, தொலைதூர புறாபந்தயத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 22 புறாக்கள் பங்கேற்றது, இதில் முதன்முறையாக திருச்சி உறையூர், மங்கள் நகரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது புறா 15 நாட்களில் 1500 கிலோமீட்டர் பறந்துவந்து சாம்பியன் கோப்பையை சாம்பியன் கோப்பையை தட்டிசென்றது, ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை சக்திவேல் என்பவரும் தட்டிச்சென்றார். இதேபோன்று டெல்லியில் இருந்து பறக்கவிடப்பட்ட 1500 கிலோமீட்டர் தொலைதூர புறாபந்தயத்தில் பெங்களூரைச் சேர்ந்த ரவி என்பவர் முதல்பரிசை தட்டிச்சென்றார்.