திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபில் கிளப்பை கடந்த 31.12.2021 – ந்தேதி தொடங்கப்பட்டது . மாவட்ட , தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது . திருச்சி மாநகர ரைபில் கிளப்பில் மொத்தம் 215 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் உள்ளனர் . மேற்படி ரைபிள் கிளப்பில் 50 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும் , 25 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும் , 10 மீட்டர் தூரத்தில் மூன்று சுடுதளம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஒன்று உள்ளது . இக்கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற ஆர்வமுள்ள மாணவ , மாணவிகளுக்கு Air Rifle பயிற்சிக்கான கோடை கால சிறப்பு முகாம் நடைபெற்றது . இக்கோடை கால முகாமில் 12 வயது முதல் 17 வயது வரையிலான பள்ளி மாணவ , மாணவிகள் கலந்து கொண்டனர் . இப்பயிற்சிக்கான முதல் பேட்ச் 01.05.2022 முதல் 15.05.2022 வரை நடைபெற்றது . அதில் முதல் பேட்சில் 10 மீட்டர் Air Rifle போட்டியில் மொத்தம் 22 மாணவ , மாணவிகள் கலந்து கொண்டார்கள் . சுபர்ணா, யோகேஷ்வரன் , கணபத்தர்ஷனா ஆகியோர் வெற்றி பெற்றார்கள் .

மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ , மாணவிகளுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் , பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பரிசளிப்பு நிகழ்ச்சியில திருச்சி மாநகர ரைபில் கிளப்பில் செயலாளர் செந்தூர்செல்வன் கலந்து கொண்டார்கள் . மேலும் இரண்டாவது பேட்ச் 15.05.2022 முதல் 31.05.2022 வரையிலும் நடைபெறகிறது . மேலும் திருச்சி மாநகரில் உள்ள பள்ளி மாணவ , மாணவிகள் இக்கோடை கால முகாமை பயன்படுத்தி துப்பாக்கி சுடுவதில் தங்களது திறனை வளர்த்து நிபுணத்துவத்தை பெற திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார் . மேலும் இம்முகாம் தொடர்பான பதிவு மற்றும் அனைத்து தகவல்களுக்கு திருச்சி ரைபிள் கிளப் தொலைப்பேசி எண் 98433-70804 என்ற எண்ணிற்க்கு தொடர்புக்கொள்ளுமாறும் , இம்முகாமிற்கு குறைவான இடங்களே உள்ள நிலையில் முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *