திருவரங்கம் கீழவாசல் வெள்ளை கோபுரம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட அரசு வங்கி உள்ளது. இந்த வங்கி இன்று காலை திறக்கப்பட்டு ஊழியர்கள் வழக்கம்போல் பணியை தொடங்கினர். வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்காகவும், போடுவதற்காகவும் தொடங்கினர். இந்நிலையில் திடீரென்று இன்வெர்ட்டர் யு.பி.எஸ் எனப்படும் பேட்டரி வெடித்து புகை கிளம்பியது. இதை பார்த்த ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். பின்னர் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது. நீண்ட நேர தாமதத்திற்குப் பிறகு அனைத்தும் சரி செய்யப்பட்டு வங்கிப்பணிகள் வழக்கம்போல் தொடங்கியது. பேட்டரி வெடித்ததால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன. வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *