அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கழக அம்மா பேரவை, கழக இளைஞர் பாசறை, கழக மகளிர் அணியில் உள்ள தொண்டர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக எழுச்சி மாநாடு பிரச்சார வாகனம் இன்று மாலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ராஜகோபுரம் முன்பாக வந்தது. இந்த எழுச்சி மாநாட்டு பிரச்சார வாகனத்தை
முன்னாள் அமைச்சரும், திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்சோதி, முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில கழக அமைப்புச் செயலாளர் வளர்மதி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.