முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தியின் 32ம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் இருந்து ஶ்ரீபெரும்புதூர் வரை ராஜீவ்காந்தி நினைவு ஜோதியை ராஜீவ் காந்திஜோதி யாத்திரை கமிட்டி மற்றும் மறைந்த பெங்களூர் பிரகாசம் குழுவினர் கமிட்டி இயக்குனர் துரைவேலு தலைமையில் பல்வேறு மாவட்டங்கள் வழியாக ஸ்ரீபெரும்புதூருக்கு கொண்டு செல்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி வழியாக கொண்டு சென்றனர்.அப்போது திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் உள்ள ராஜீவ்காந்தி திருவுருவ சிலைக்கு திருச்சி மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து ராஜீவ் காந்தி நினைவு ஜோதி புறப்பட்டு பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை வழியாக பாண்டிச்சேரி கொண்டு செல்ல உள்ளனர். தொடர்ந்து 21ம் தேதி 32ம் ஆண்டு நினைவு நாளான அன்று ஸ்ரீபெரும்ப்புத்தூருக்கு நினைவு ஜோதி கொண்டு செல்லபட்ட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜ் மற்றும் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் வக்கீல் எம் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மோகனாம்பாள் மாவட்ட துணை தலைவர் வில்ஸ் முத்துக்குமார் கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், பிரியங்கா பட்டேல், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பட்டேல்,அனந்த பத்மநாபன், முன்னாள் கோட்ட தலைவர் ஆனந்தராஜ், மாநகர மாவட்ட மகளிர் அணி தலைவி ஷீலாசெலஸ், வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி செல்வி, அகிலாம்மாள், சிறுபான்மைபிரிவு தலைவர் சுபேர், ஷேக் இப்ராகிம், பட்டதாரிபிரிவு தலைவர் ரியாஸ், அமைப்புசாரா தொழிலாளர் தலைவர் முஸ்தபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *