திருச்சி மாவட்டம் சமயபுரத்திலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் புதிய தேசிய நெடுஞ்சாலையில் மாடக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையோரத்தில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலில் ஆயிரக்கணக்கான காலாவதி ஆகாத ஆணுறைகள் தண்ணீரில் வீசப்பட்டு மிதக்கின்றன. அந்த ஆணுறைகளில் அரசு முத்திரை பொறிக்கப் பட்டிருப்பதால் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக கொடுக்க வழங்கப்பட்டதாக தெரிகிறது.

பல ஆயிரம் மதிப்புடைய ஆணுறைகள் வீணாக தண்ணீரில் வீசி செல்லப் பட்டுள்ளன. இதில், 40 சதவிகித ஆணுறைகள் மட்டும் அடுத்து ஆண்டு 10 / 2024 காலா வதி ஆக கூடியவை, மற்ற 60 சத விகித ஆணுறைகள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டு 2026 ஆம் ஆண்டுகள் வரை பயன்படுத்தக் கூடிய காலாவதியாகாத ஆணுறைகள் ஆகும். இங்கு எப்படி இவ்வளவு ஆணுறைகள் கொட்டப்பட்டு கிடக்கின்றன என்பது தெரியவில்லை.

மருத்துவ கழிவுகள் மற்றும் மருந்து மாத்திரைகள் சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் முறைப்படி அப்புறப்படுத்தப் பட வேண்டும் என்ற விதிகள் இருக்க, இவையனைத்தும் சாலையோரம் வீசி சென்றவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. விவசாய நிலத்தில் பாசனத்திற்காக செல்லும் வாய்க்காலில் ஆயிரக்கணக்கான ஆணுறைகள் வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசு மருத்துவமனையில் வழங்கும் ஆணுறையானது எப்படி விவசாய நிலத்துக்கு செல்லும் வாய்க்காலில் வந்தது எப்படி என்பது குறித்து அரசு மருத்துவமனையில் இருந்து வந்ததா அல்லது தொண்டு நிறுவனத்திடமிருந்து வந்ததா ஆரம்ப சுகாதார நிலையம் திருச்சியில் வந்ததா என்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *