திருச்சியில் புகழ் பெற்ற வீரா ஜிம் மற்றும் பிட்னஸ் வீரா ஸ்போர்ட்ஸ் அண்ட் துரோபி மற்றும் திருச்சி ஐஎஃப்எஃப் சார்பில் மிஸ்டர் ஸ்ட்ராங் மேன் தமிழ்நாடு 2023 மாநில அளவிலான ஆணழகன் போட்டி திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள மரியம் மங்கல மஹாலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ஆணழகன் போட்டிக்கு வீரா ஜிம் மாஸ்டர் ராகுல் ராஜ் தலைமை தாங்கி நடத்தினார்.

இந்த ஆணழகன் போட்டியில் பவர் லிப்டிங், டெத்லிப்ட், பைசா புஷ்ஷப் உள்ளிட்ட பிரிவுகளில் 60 கிலோ எடை பிரிவு ஆண் அழகன்கள் 70 கிலோ எடை பிரிவு ஆண் அழகன்கள் 80 கிலோ எடை பிரிவு ஆண் அழகன்கள் பங்கேற்றனர் இதே போல் டெத் லிப்ட் பைசா புஷ்ஷப் ஆகிய பிரிவுகளிலும் பவர் லிப்டிங் பிரிவுகளில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட ஜிம் மாஸ்டர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். இதில், ஆர்வமுடன் கலந்து கொண்ட இளைஞர்கள் தங்களது திறமைகளை பார்வையாளர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினர். முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ் பரிசு பொருட்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

இந்த மிஸ்டர் ஸ்டாங் மேன் தமிழ்நாடு 2023 ஆம் ஆண்டுக்கான ஆணழகன் போட்டியில் பங்கேற்பதற்காக கர்நாடகா கேரளா ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *