திருச்சி வரகனேரி ஓடையர் குளம் ஸ்ரீ கமலாம்பிகை அம்மை உடனமர் ஸ்ரீ கைலாச நாதர் திருக்கோவிலின் திரு கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 10 மணி 45 மணிக்கு ஸ்ரீ சுப்பிரமணியர் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக வரகனேரி சிவசுப்பிரமணியர் திருக்கோவில் சுவாமியின் வீதி உலா நேற்று மாலை நடைபெற்றது. மேலும் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் மற்றும் ஸ்ரீமத் ஆனந்த நடராஜருக்கு மகா நெய்வேதியம், தீபாரதனை நடைபெற்றது.

மேலும் வருகிற டிசம்பர் 2-ம் தேதி ஸ்ரீ கமலாம்பிகை – ஸ்ரீ கைலாசநாதர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 4-ம் தேதி திருத்தேர் நடைபெற உள்ளது. மேலும் இந்த மாதம் நவம்பர் 26 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் ஏழாம் தேதி வரை ஸ்ரீ விநாயகர் வீதி உலா ஸ்ரீ சூரியபிரபை, ஸ்ரீ கற்பக வ்ருஷ்ம், ஸ்ரீ ஆனந்த வாகனம், ஸ்ரீ ரிஷப வாகனம்,

யானை வாகனம் ஸ்ரீ குதிரை வாகனம், ஸ்ரீ நடராஜர் உற்சவம், ஸ்ரீ கைலாச வாகனம் ஆகிய வீதி உலா நடைபெற உள்ளது இந்த தீப திருக்கார்த்திகை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியின் அருளாசி பெற்று செல்லுமாறு கோவில் நிர்வாக சார்பாக கேட்டுக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்