திருச்சி சோழங்கநல்லூர் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர், ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ குழுமாயி அம்மன், ஸ்ரீ ஒண்டி கருப்பண்ண சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமத்துடன் பூஜை துவங்கியது. அதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு. மார்ச் 1-ம் தேதி முதற்கால யாகத்துடன் தொடங்கி நேற்று இரண்டாம் கால யாகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மூன்றாம் கால யாகத்துடன் மஹா பூர்ணாஹீத், தீப ஆராதனை யுடன் புனித நீர் எடுத்துவரப்பட்டு அருள்மிகு சர்வ சித்தி விநாயகர் ஸ்ரீ குருமாயி அம்மன் ஸ்ரீ மஹா காளியம்மன் ஸ்ரீ ஒட்டி கருப்பண்ண சுவாமி ஆகிய தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
மேலும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த மகா கும்பாபிஷேக விழாவிற்கு சோழங்கநல்லூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அம்மன் அருள் பெற்று சென்றனர்.