தமிழகத்தில் நடைபெற்று வரும் கிராமசபை கூட்டம் போல், தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நகர பகுதிகளில் நகரசபை, மாநகர சபை கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது, அதன் படி நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் 11- வது வார்டு சாலை ரோடு சுபமங்கள மஹாலில் இன்று காலை திருச்சி மாவட்ட திமுக துணை செயலாளரும், 11-வது வார்டு கவுன்சிலர் விஜயஜெயராஜ் தலைமையில் பகுதி சபை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 11-வது வார்டுக்கு உட்பட்ட கீரை கொள்ளை தெரு, இந்திரா நகர், சோழராஜபுரம், வாத்துக்காரர் தெரு, பெரிய கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து

வந்த பொது மக்கள் தங்களின் கோரிக்கைகளான குடிநீர் பிரச்சனை சாலை வசதி சுகாதார வசதிகள் மற்றும் அடிப்படை பிரச்சனைகள் குறித்த கோரிக்கைகளை மனுவாக இன்று வழங்கினார்.

இந்த கூட்டத்தில் பில் கலெக்டர் வீரதிலகம், பொருளாளர் முத்து பழனி 11 வது வார்டு திமுக வட்ட செயலாளர் தர்முசேகர், மாவட்ட பிரதிநிதி சம்பத் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கேரள மாணவர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *