திருச்சி மாநகராட்சி 54 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராமமூர்த்தி பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள வீதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில் நான் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனதும் இந்த வார்டில் உள்ள குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வேன். மேலும் இந்த வார்டை முதன்மை வார்டாக கொண்டு வருவேன்.

பொதுமக்கள் எந்த நேரமும் என்னை தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். உங்கள் வீட்டுப் பிள்ளையாக ஓடிவந்து உங்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் எனக் தெரிவித்தார்.

மேலும் இன்று மாலை பெரிய மிளகுபாறை மாரியம்மன் கோவிலை சுற்றியுள்ள தெருக்களில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து 54-வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடும் ராமமூர்த்தியாகிய எனக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்குமாறு கூறி துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

ஏற்கனவே இந்த வார்டில் இரண்டு முறை மாமன்ற உறுப்பினராக இருந்து. எண்ணற்ற பணிகளை மக்களுக்கு திறம்பட செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.