தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை நடந்த வாக்கு எண்ணிக்கையில் திருச்சி 56-வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் PRB மஞ்சுளாதேவி 4323 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவருக்கு திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தொண்டர்கள் மாலை அணிவித்து வீரவாள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் 56-வது வார்டில் வெற்றி பெற்ற வேட்பாளர் PRB மஞ்சுளாதேவிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வ பாலாஜி வழங்கிய திருச்சி 56 வது வார்டு மாமன்ற உறுப்பினருக்கான சான்றிதழை பெற்றுக் கொண்டதும்.

அங்கிருந்து நேராக தில்லை நகர் சாஸ்திரி ரோடு பகுதியில் உள்ள திமுக அலுவலகத்திற்கு சென்று அங்கு திமுக கழக முதன்மை செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என் நேருவை நேரில் சந்தித்த

திருச்சி 56-வது வார்டு கவுன்சிலர் PRB மஞ்சுளாதேவி மற்றும் அவரது கணவர் PRB பாலசுப்பிரமணியன் ஆகியோர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *