திருச்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுவதையொட்டி திருச்சி மாநகரில் உள்ள 65-வார்டுகளை சேர்ந்த திமுக கூட்டணி வேட்பாளர்கள், அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.‌

அந்த வகையில் மக்களின் நன்மதிப்பை பெற்ற திருச்சி காஜா மலை திமுக பகுதி செயலாளரும், 60-வது வார்டு வேட்பாளருமான காஜா மலை விஜி வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரித்து வருகிறார்.

 அதன் படி நேற்று இரவு கே.கே.நகர், சுந்தர் முக்கிய வீதிகளில் உள்ள வாக்காளர்களிடம் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 60-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காஜா மலை விஜி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்குகள் சேகரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்