திருச்சி மாநகராட்சி 65 ஆவது வார்டு பகுதிக்கு உட்பட்ட செம்பட்டு, புதுத்தெரு, பட்டத்தம்மாள் தெரு, காமராஜர் நகர் ஆகிய நான்கு ஊர் பகுதி மக்கள் பயன்படுத்தும் செம்பட்டு சுடுகாட்டை சீரமைத்து தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பகுதி செயலாளர் பால்கிருஷ்டி தலைமையில் ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளைச் செயலாளர் சந்தானம் முன்னிலை வகித்தார். இதில் ஏஐடியுசி பொதுச் செயலாளர் க.சுரேஷ், மூத்த தோழர் பொன்னுதுரை, மாணவர் பெருமன்ற மாநிலப் பொருளாளர் க.இப்ராஹிம், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் எம்.ஆர். முருகன், பொன்மலை பகுதி செயலாளர் பராஜா,
மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர்.கார்த்திக், இளைஞர் பெருமன்ற நிர்வாகி சுதாகர் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட தலைவர் மார்க்சிம் கார்கி நன்றி கூறினார்.