திருச்சி ராம்ஜி நகரை அடுத்த கே.கள்ளிக்குடியில் NR IAS அகாடெமி இயங்கி வருகிறது இங்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அகாடமியில் பயின்ற 21ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அரசு அதிகாரிகளாக பதவி வகித்து வருகின்றனர்.

இங்கு பயிலும் கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களை மிஞ்சும் வகையில் சாதனைகள் படைத்து வருகின்றனர். இதில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவ்வப்போது அறிவுசார் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று வெற்றி நிச்சயம் சிறப்பு நிகழ்ச்சி அகாடமி கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு அதன் தலைவர் ஆர்.விஜயாலயன் தலைமை தாங்கினார் .

இந்நிகழ்ச்சியில் சமீபத்தில் NR IAS அகாடமியில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டு போட்டி தேர்வுகளில் எவ்வாறு பயின்று வெற்றி பெறுவது என தந்து அனுபவங்களை தற்போது படிக்கும் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர் இதில் தற்போது பயிற்சி பெற்று வரும் மாணவ- மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *