திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டூர் பாலாஜி நகர் 12 வது கிராஸில் வசித்து வரும் ரவிசந்திரன் ( லேட் ) , இவரது மனைவி உமாமகேஸ்வரி கடந்த 14.02.2022 – ம் தேதி காலை சுப்புரமணியபுரத்தில் உள்ள சுகாதாரதுறை அலுவலகத்தில் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் மறைவாக வைத்திருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த சுமார் 9 பவுன் தங்க நகை மற்றும் 2 ஜோடி வெள்ளி கொலுசுகள் , ( மொத்த மதிப்பு 1,80,000 / – ) ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள்திருடி சென்றது தெரியவந்தது உடனடியாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருச்சி திருவெறும்பூர் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த திருச்சி ஏர்போர்ட் புது தெரு பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி என்பவரின் மகன் ஆன்ட்ரூஸ் வயது 54 என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் நகைகளை திருடியது ஆன்ட்ரூஸ் என தெரியவந்தது அதனைத் தொடர்ந்து அவனிடமிருந்து நகைகளை மீட்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 24 மணி நேரத்தில் திருடனை கைது செய்த திருவெறும்பூர் காவல் நிலைய போலீசாரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் பாராட்டு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *