திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரில் இயங்கி வந்த ஆஷா மர அறுவை மற்றும் விற்பனை கடையில் மர்மநபர் ஒருவர் சுவர் ஏறி குதித்து அரவை மில்லில் பணியில் இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்களிடம் இருந்த பணத்தை திருட முயற்ச்சி போது அவரை பிடித்து கடுமையாக தாக்கி மரத்தில் கட்டி வைத்துள்ளனர். மேலும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இன்று அதிகாலை இறந்துள்ளார்.

இதுகுறித்து மில்லின் மேலாளர் நரேந்தர் மணிகண்டதிற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த மேலாளர் திருச்சி மணிகண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மணிகண்டம் போலீசார் வாலிபர் உயிரிழந்த இடத்தை பார்வையிட்டு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த கொலைத் தொடர்பாக மில்லில் வேலை பார்த்த அசாம் மாநிலத்தை சேர்ந்த சோகிததுல் சேக் வயது (22), பைசல் ஷாக் (36) மப்ஜில் ஹூக் (28), ரசீதுல் ரஹ்மான் (22) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் போலீசார் விசாரணையில் உயிரிழந்த நபர் திருச்சி துவாக்குடி தெற்கு, வாண்டையார் தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் சக்கரவர்த்தி வயது(33) எனவும் இவருக்கு திருமணமாகி உமா மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *