திருச்சி மத்திய பஸ் நிலையத்தை சுற்றி அரசு மதுபான கடைகள் அதிகமாக உள்ளது குறிப்பாக தமிழ்நாடு ஹோட்டல் எதிரே அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் பார் இல்லாத காரணத்தால் மது வாங்க வரும் நபர்கள் மதுக்கடை அருகாமையிலேயே அமர்ந்து திறந்த வெளியில் மது அருந்துகின்றனர் . குடித்த காலி பாட்டில்களை அப்படியே வீசுவதும் , தண்ணீர் பாக்கெட்டுகள் , டம்ளர் , உணவுப் பொருட்களை அப்படியே வீசிச் செல்வதும் வாடிக்கையாக உள்ளது . இதனால் , சுகாதாரக்கேடு ஏற்படுவது ஒருபுறமிருக்க திறந்த வெளியில் அருந்தும் நபர்களை பார்த்து பெண்கள் முகம் சுழித்த வண்ணம் செல்கின்றனர்

திறந்தவெளியில் மது அருந்தும் நபர்கள் பலர் போதை தலைக்கு ஏரி இருசக்கர வாகனத்தில் சாலைகளில் பயணிப்பதால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் பெரும் விபத்துக்குள்ளாகி ன்றனர். மேலும் சாலை ஓரங்களில் அரை நிர்வாணக் கோலத்தில் படுத்துவிடுகின்றனர் . சிலநேரங்களில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பும் அரங்கேறுகிறது . இத்தகைய சம்பவங்களால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.இதனை அரசு மதுபான கடை ஊழியர்களோ அல்லது கண்டோன்மெண்ட் காவல்துறையினரோ கண்டுகொள்வதில்லை.
அதுமட்டுமில்லாது திருச்சி மத்திய பேருந்து நிறுத்த வளாகத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு அறைக்கு பின்புறத்தில் குடிமகன்கள் மதுவை குடித்து விட்டு அப்படியே பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வீசி செல்வதால் அவ்வழியாக நடந்து வரும் பயணிகள் மற்றும் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் முகம் சுளித்து செல்கின்றனர். அருகாமையில் உள்ள கடைகளில் இதே நிலை இருப்பதால் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவியர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்
இரவு நேரங்களில் அப்பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இதனையடுத்து இந்த மத்திய பஸ் நிலையத்தில் வைத்து மது அருந்துதல், சூதாடுதல் போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றது. எனவே அதிகாரிகள் பஸ் நிலையத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், அவ்வாறு செய்யவில்லையென்றால் மத்திய பஸ் நிலையம் மிகவும் மோசமான நிலைக்கு சென்று விடும் எனவும், சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *