கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை இன்று தன்னுடைய 16 வது கிளையை திருச்சி கன்டோன்மெண்ட், வில்லியம்ஸ் சாலையில் திறந்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவத்தை, அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் வழங்கும் நோக்கத்தில், தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையை திறந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் தனது கிளைகளை நிறுவி தொடர் சேவையை அளித்து வருகின்றது. தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை 3 அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அறுவை சிகிச்சை அறைகள், 6 மருத்துவ ஆலோசனை அறைகள், 5 பரிசோதனை அறைகள், 8 அறிவியல் சாதனங்கள் கொண்டு கண்களை சோதனை செய்யும் இடங்கள், நவீன கண் கண்ணாடி சேவை, மருந்தகம், அனைத்து வசதிகள் கொண்ட நோயாளிகள் தங்கும் அறைகள் மற்றும் பகல் நேர நோயாளிகளின் ஓய்வு அறைகள் என அனைத்து வசதிகளும் உள்ளன.

மேலும் இந்த மருத்துவமனையில் அதி நவீன லேசர் கண்புரை சிகிச்சைமுறை, லேசிக்: ஒளிவிலகல் பிழைகளை சரிசெய்வதற்கான உலகின் வேகமான மற்றும் மேம்பட்ட லாசிக் சிகிச்சை உபகரணங்கள், அதிநவீன விட்ரக்டோமி சிகிச்சை முறை கொண்டு கண் விழித்திரைக்கான அறுவை சிகிச்சை, குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய்க்கான சிகிச்சை, மாறுகண் சிகிச்சை, குழந்தைகள் கண் மருத்துவம், ஆக்குலோபிளாஸ்டி சிகிச்சை: கண்ணைச் சுற்றி மேற்கொள்ளப்படும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, கண் காயத்திற்கான சிகிச்சை, கருவிழி மாற்று சிகிச்சை, கண் நரம்பியல், ஆப்டோமெட்ரி மற்றும் முழுமையான கண் கண்ணாடி சேவை போன்றவைகள் வழங்கப்பட்டுகிறது. இந்த திறப்பு விழாவினை முன்னிட்டு திருச்சி மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்ட மக்களுக்கு ஆரம்பகால சிறப்புச் சலுகையாக இரண்டு மாதத்திற்கு இலவச முழு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்க உள்ளது. புதிததாக திறக்கப்பட்ட கிளையை இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் முன்னாள் தலைவர் அஷ்ரப் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தி ஐ ஃபவுண்டேஷனின் தலைவர் டாக்டர். டி. ராமமூர்த்தி திறந்து வைத்து பேசுகையில்…

தேசிய அளவில் தரமான கண் மருத்துவத்திற்கு ஒர் பூர்த்தி செய்யப்படாத தேவை இருந்து கொண்டே இருப்பதாகவும், திருச்சி மாவட்டம் அதற்கு விதிவிலக்கு இல்லை என்றும் கூறினார். மேலும் அவர், 100க்கும் மேற்பட்ட திறமையான கண் மருத்துவர்கள், சுமார் 200 அனுபவமிக்க ஆப்டோமெட்ரிஸ்ட், மற்றும் 650 க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களைக் கொண்டு செயல்படுவதே தி ஐ ஃபவுண்டேஷனின் உண்மையான வலிமை என்று கூறினார். கடந்த 35 ஆண்டுகளாக தி ஐ ஃபவுண்டேஷன் தன்னுடைய மருத்துவ மையங்கள் மூலம் கோவை, திருப்பூர், பெங்களூர், நீலகிரி, பாலக்காடு. எர்ணாகுளம், ஈரோடு. பொள்ளாச்சி, சேலம், திருநெல்வேலி, மதுரை போன்ற மாவட்டங்களில் சுமார் 20 லட்சத்திற்கும் மேலானவர்களுக்கு சிகிச்சையை அளித்து சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகின்றது.

அதேபோல் நாட்டிலேயே பல நவீன கண் சிகிச்சை முறைகளை முதல் முறையாக அறிமுகப்படுத்திய பெருமையையும் பெற்றுள்ளது. இம்மருத்துவமனை பார்வை திருத்தம் மற்றும் கண்புரை நீக்கம் சிகிச்சை முறைகளில் முதன் முறையாக லேசர் முறையை அறிமுகப்படுத்தி, மிக துல்லியமான பார்வை பலனை பெற்று தந்த முன்னோடிகளில் ஒன்றாக திகழ்கிறது .தி ஐ ஃபவுண்டேஷன் என்றும் தரமான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் வகையில், ஒர் வலுவான ஆய்வு மற்றும் கல்வி துறையை உருவாக்கியுள்ளது. இக்கல்வித்துறை, மருத்துவர்கள், ஆப்டோமெட்ரிஸ்ட் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் என அனைவருக்கும் உரிய பயிற்சியை அளித்து வருகிறது.தற்போது டாக்டர். சித்ரா ராமமூர்த்தி, தி ஐ ஃபவுண்டேஷன், இயக்குநராகவும், அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் (AIOS ) கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவின் தலைவராக பொறுப்பேற்று கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஒருங்கினைத்து வருகிறார்.இந்த திறப்பு விழாவில் மருத்துவர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *