தீபாவளி பண்டிகையானது வருகின்ற 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் ஞாயிற்றுக் கிழமையான இன்று பொதுமக்கள் தீபாவளி பொருட்களை வாங்க குவிந்து வருகின்றனர்.

இதற்காக திருச்சி மாவட்டம் மட்டும் இன்றி அருகில் உள்ள மாவட்டங்களான தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை , கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தருகின்றனர்.

திருச்சி மாநகரத்தை பொறுத்தவரை தெப்பக்குளம், சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி பகுதிகள் திருச்சி மாநகரத்தின் இதய பகுதியாக இருந்து வருகிறது .இந்தப் பகுதியில் தான் அனைத்து விதமான கடைகளும் அமைந்துள்ளன.

எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பட்டாசுகள் ஆடை அணிகலன்கள், காலணிகள், இனிப்புகள் வாங்க இந்த பகுதியில் அலைமோதுகின்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காணப்படுகிறது.

எனவே அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் 186 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, 7 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது மேலும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *