திருச்சி பொன்மலை பணிமனையில் புதிதாக கட்டமைக்கப்பட்ட 66-வது PSU LOGO மற்றும் NMGHS ரயில் இன்ஜின்களை தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின்னர் பொன்மலை பணிமனையினை ஆய்வு செய்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. பொன்மலை பணிமனை 100 வருட வரலாற்று சிறப்பு பெற்றது‌. இன்று இந்த பொன்மலை பணிமனையில் உருவாக்கப்பட்ட முதல் High Speed Diesel Engine நீலகிரி மலைப்பாதைக்கு அனுப்பப்பட்டுள்ளது.இது முழுக்க இந்தியாவின் முயற்சி இதை உருவாக்க பாடுபட்ட தொழிலாளர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வந்தே பாரத் திட்டம் தமிழகத்திற்க்கு வர கொஞ்சம் காலம் ஆகும். நடப்பு நிதியாண்டில் சில ரேக்ஸ்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பாரத் கௌரவ் திட்டத்தில் ஏற்கனவே 5 ரயில்கள் இயங்குகின்றன.

மேலும் கூடுதலாக ஒரு ரயில் இந்த மாதத்திலும்,நவம்பர் மாதத்திலும்,3 ரயில்கள் அக்டோபர் மாதத்திலும் இயக்கப்படும்.பாரத் கௌரவ் திட்டத்தகற்க்கு தமிழகத்தில் பல்வேறு இடங்கள் தேர்வு செய்ப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில் பாரத் கௌரவ் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *