மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் கடந்த 20ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தேசிய அளவிலான 19 வயதுக்குட்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கும் 14ஆவது ஜூனியர் சாம்பியன்ஷிப் ஐவர் கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. இந்தியாவை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தை சேர்ந்த பயிற்சியாளர் முகமதுபர்தீன் தலைமையிலான விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டு தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்றனர். தமிழகத்திலிருந்து கலந்து கொண்ட விளையாட்டு வீரர்களில் யோகேஸ்வரன் மற்றும் முகமதுசபீர் ஆகியோர் சிறந்த விளையாட்டு வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் இந்திய அளவில் சிறந்த விளையாட்டு வீரராக பிரணவ் தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்றார்கள் இன்று இரவு ரயில் மூலம் திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்தனர். அவர்களை பெற்றோர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்