பள்ளிக்கல்வி துறை சார்பாக ஆய்வக உதவியாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பயிற்சி கட்டகம் வெளியிடுதல் விழா திருச்சி கீழ சிந்தாமணி நேஷனல் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினாரக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு ஏப்ரல் மே மாதத்தில் நடைபெற்று பயிற்சியில் பயிற்சி பெற்ற 3020 ஆய்வக உதவியாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கி பயிற்சி கட்டகம் வெளியிட்டார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் ( கூடுதல் பொறுப்பு) பழனிச்சாமி , திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் மதுமதி மற்றும் பள்ளிக்கல்வி துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்: ஒருங்கிணைந்த கல்வி மூலமாக ஒன்றிய அரசு நிதி வழங்கிக் கொண்டுள்ளது இந்த வருடம் நிதி 2153 கோடி நிதியை வழங்கவில்லை. இதனால் இந்த மாணவர்களின் கல்வி மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்டவை பாதிக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒன்றிய அமைச்சரை இரண்டு முறை சந்தித்து கருத்துகளை தெரிவித்தோம் இது குறித்து பார்த்து சொல்கிறோம் என கூறினார் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்பு சந்தித்து நிதி வரவில்லை என கூறினோம் நீங்கள் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட்டாள் அரை மணி நேரத்தில் நிதி ஒதுக்குவதாக தெரிவித்தார். நாங்கள் 3 , 5 , 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, மும்மொழி கொள்கை , குலக்கல்வி திட்டம் மறைமுகமாக கொண்டுவதுவது உள்ளிட்ட பாதகங்களை கூறியும் நீங்கள் யோசித்துக் கூறுங்கள் என சொல்லிவிட்டார். இதை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் அவர் என்ன கூறுகிறாரோ அதை சார்ந்து எங்கள் நடவடிக்கை இருக்கும் என தெரிவித்தார் ஆளுநர் மாநில பாடம் திட்டம் குறித்து கூறிய கேள்விக்கு ? பள்ளி நூலகங்களில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகர ஆறாம் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரை உள்ள மாநில பாடப் புத்தகத்தில் இருந்து தான் படிக்கின்றனர் யுபிஎஸ்சி முதற்கொண்டு மாநில பாட புத்தகத்தில் தான் படிக்கின்றனர். வேண்டுமென்றால் ஆளுநரை அழைத்துச் சென்று போகிறேன் அங்கு போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களிடம் அவரே கேள்வி கேட்கட்டும் என்றார்