திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் தேசிய பத்திரிக்கையாளர் தினமான இன்று தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் தேசிய பத்திரிகையாளர் தின விழா நடைபெற்றது இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை ஆசிரியர்கள் துணை ஆசிரியர்கள் மாவட்ட நிருபர்கள் புகைப்பட கலைஞர்கள் மற்றும் தாலுகா நிருபர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்,

 விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு, அரசு தலைமை கொறடா கோவி செழியன், ராக்போர்ட் டைம்ஸ் ஆசிரியர் லட்சுமி நாராயணன் ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்டனர் .

மேலும் பத்திரிகையாளர் நலனை கருதி ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீட்டு திட்ட அட்டையை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கினார்.,

  இந்த விழாவில் பத்திரிகையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பத்திரிக்கையாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து அனைவரிடமும் ஆலோசிக்கப்பட்டது, மேலும் பல்வேறு கருத்துக்கள் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகளுக்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் நல சங்கத்தின் தலைவர் சரவணன், பொதுச் செயலாளர் சத்தியநாராயணன் ஜன முரசு ஆசிரியர் முகமது கனி,  பொருளாளர் காமேஷ் கண்ணன், மற்றும் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *