கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமை கழகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 முதல் 2016 வரை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவராகவும் இருந்தார். தற்போது சாலிகிராம இல்லத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூத உடல் எடுத்து செல்லபட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *