தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 71 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அவரது கட்சி தொண்டர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் மாநகர செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் மலைக்கோட்டை பகுதி வெத்தலை பேட்டை வளைவு 17வது வார்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கினர்.
அதன்பின் பாலக்கரை பகுதி சார்பாக 49 வது வார்டு 34 ஆவது வார்டு 30 வது வார்டு 50வது வார்டுகளில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது 44 45 46 48 35 ஆகிய இடங்களில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது மதியம் மன்னார்புரம் விழியிழந்தோர் பள்ளியில் ஏர்போர்ட் பகுதி கழகம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. இன்று மாலை உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் உறையூர் பகுதி சார்பாக கேப்டன் விஜயகாந்த் பூரண நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் என தங்கத்தேர் இழுத்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் அவை தலைவர் ஜெயராமன் பொருளாளர் மில்டன் குமார் துணை செயலாளர்கள் ப்ரீத்தா விஜய் ஆனந்த் ராஜ்குமார் மகாமுனி காளியப்பன் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ராமு கலைப்புலி பாண்டியன் பாலமுருகன் லோகராஜ் விஜய் சுரேஷ் பகுதி கழக செயலாளர் மணிகண்டன் சங்கர் அருள்ராஜ் சாத்தனூர் குமார் அலெக்ஸ் சாதிக்அலி மோகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் மகளிர் அணி இளைஞரணி மாணவர் அணி நிர்வாகிகள் பகுதி கலக நிர்வாகிகள் மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்