திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட எரகுடியில், உப்பிலியபுரம் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமாக மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக வந்த மூவரை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் நாமக்கல் மாவட்டம் மேட்டுப்புதூர் மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த குள்ளா என்கிற தாமோதரன் (வயது 19)

மற்றும் அவரது நண்பர்கள் இருவருடன் வழிப்பறி, மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டுகளில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது, உடனடியாக உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்ததின் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தாமோதரன் மீது பல்வேறு ஊர்களில் குற்ற வழக்குகள் இருந்ததையடுத்து துறையூர் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் பரிந்துரையின் படி, திருச்சி கலெக்டர் சிவராசு, குண்டர் சட்டத்தின் கீழ் தாமோதரனை கைது செய்ய உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறையிலுள்ள தாமோதரனிடம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *