திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

1. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பரவாலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் 90 சதவீத்திற்கு மேல் நிரம்பி உள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கச் செல்வதை தவிர்க்க வேண்டும் .

2. தாழ்வான பகுதிகளிலும் , நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் .

3. மழை / வெள்ளம் நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க கூடாது . வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் .

4. பொதுமக்கள் தங்களது ஆதார் / குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் .

5. நீர்விழ்ச்சிகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.

பேரிடர் காலங்களில் , பொதுமக்கள் கீழ்கண்ட பொருட்களை வைத்திருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார் .

மெழுகுவத்தி மற்றும் தீப்பெட்டி ஒரு வார காலத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் ( உணவு வகைகள் ) எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் மருந்து மற்றும் பால் பவுடர் மின்விளக்குகள் மற்றும் உபரி பேட்டரிகள் சுகாதாரத்தை பேணிக் காக்க தேவையான பொருட்கள் * முகக் கவசங்கள் பொதுமக்கள் அனைவரும் மேற்குறிப்பிட அறிவுரைகளை பின்பற்றி எவ்வித சேதமும் எற்படாமல் அனைவரும் பாதுகாப்ப இருக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்