பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் EMPLOYEES PENSION SCHEME – 1995 ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் வரக்கூடிய தொழிலாளர்களின் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வருகின்ற மத்திய பட்ஜெட்டில் நிறைவேற்ற வலியுறுத்தி , IMTS சங்கம் சார்பில் , நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்புநீதி நிறுவன அலுவலகங்கள் ( EPFO ) முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக திருச்சி ராஜா தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள BPFO அலுலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மேலும் , EPFO regional Commissioner மூலம் மத்திய நிதி அமைச்சருக்கு மகஜர் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார் மாநில செயலாளர் தணிக்கை அரசு முன்னிலை வகித்தார். பெல் மஸ்துர் சங்க பொதுச் செயலாளர் சங்கர் கண்டன உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:-

EPS.95 பென்ஷன் திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட பென்சன் தொகை 1000-ல் இருந்து Rs . 5,000 / -மாக உயர்த்தி தரக்கோரியும். தற்போது உள்ள ஒட்டுமொத்த 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும் வகையில் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையை உயர்த்திடக் கோரியும், EPS – 95 ஓய்வூதியர்களுக்கு , சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் அவர்களை ஆயுஷ்மான் பாரத் மருத்துவ திட்டத்தில் சேர்த்திடக்கோரியும். நாட்டில் உள்ள அனைத்து வகையான ஓய்வூதிய திட்டத்திலும் , ஊழியரின் கடைசி மாத சம்பளத்தில் 50 % தொகை ஓய்வூதியமாக கிடைக்கும் வகையில் திட்டத்தை வகுத்திடுக் கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்