பெண்கள் விண்வெளி துறைமுதல், பருவநிலை மாற்றம் சார்ந்த தொழில்நுட்ப துறைகள் வரை மேலும்,பல துறைகளில், சமீப காலங்களில் தங்களின் சிறப்பான செயல்திறனை நிரூபித்து சாதனைகளை குவித்து வருகின்றனர். அந்த வகையில் TREC-STEP-ன் இந்த விருது வழங்கும் விழாவானது பெண்களின் உன்னதத் தனி திறமை, செயல்முனைவு, விடாமுயற்சி, தொழில்திறன் ஆகியவற்றை பல்வேறு துறைகளில் அவர்கள் செய்த சாதனைகள் மூலம், எடுத்துக்காட்டி வலியுறுத்தி, அதனை கொண்டாடும் முக்கியமான நிகழ்ச்சியாகும். பெண்களின் தொழில்நுட்பம் சார்ந்த செயல் திறனையும், தொழில் முனைவுகளையும், ஊக்கப்படுத்துவது நம் சமூகத்தில் பெண்களின் சம உரிமையையும், பங்கேற்பையும் நிலைநாட்டி, அதன் மூலம் சமூகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு வழி வகுக்கிறது.

TREC-STEP, இந்தியாவின் முதல் விண்வெளி ஆராய்ச்சி நிபுணர், திருமதி. நிஹார் ஷாஜி, திட்ட இயக்குநர், Aditya L1 இந்தியாவின் சூரிய விண்வெளி பயண சிறப்புப்பணியினை தலைமையேற்று செயல்படுத்தி வருகிறார். TREC-STEP அவர்களின் மிக சிறந்த செயல்

திறனையும் விண் வெளி துறையில் செய்த சாதனைகளையும் பாராட்டி, சி. விருதினை வழங்கியது. திருமதி. நிஹார் ஷாஜி அவர்கள் Indian Remote Sensirg, திட்டங்களில் Programme போன்ற ISRO வில் Communication and Interplanetary Satellite மிகச்சிறந்த சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அவர் துணை திட்ட செயலராக Resourcesat-2A, The Indian Remote Sensing Satellite for National Resource Monitoring & Management துறையில் பல முக்கிய பணிகளை செய்துள்ளார். L1 தற்போது Aditya சூரிய விண்வெளி பயண திட்டத்தின் இயக்குனராக பல பணிகளை விண்வெளி சிறப்பான துறையில் ஆற்றிவருகிறார்.

பசுமை சார்ந்த, பருவ நிலை மாற்றம் சார்ந்த பெண்களின் சிறுகுறு தொழில் முனைவுகளை ஊக்குவிக்கும் விருது வழங்கப்பட்டது.இதில் 30 பசுமை சார்ந்த, பருவநிலை மாற்றம் சார்ந்த பெண்களின் சிறு குறு தொழில்களை தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு திருமதி. நிஹார் ஷாஜி அவர்கள் விருது வழங்கினார். இந்த 30 தொழில் முனைவோரும் 3 மேலாண்மை மற்றும் தொழில்முனைவு துறை சார் நிபுணத்துவம் உடைய நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த 30 பெண் தொழில்முனைவோரும் TREC-STEP ப்பின் ஐரோப்பிய ஒன்றிய உதவியுடன் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டமான, Gender Enabling Network of Innovation and Entrepreneurship CSOs for Climate Venture (GENIE CSOs for Climate Ventures) திட்டத்தில் பொது சமூக நிறுவனங்கள் Network ன் உதவியுடன் தமிழகம் முழுவதிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *