மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 99-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி கோயினூர் தியேட்டர் அருகே உள்ள திருச்சி மண்டலம் போக்குவரத்து கழக மலைக்கோட்டை கிளை அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் டாக்டர் கலைஞரின் 99-வது பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு திருச்சி மாநகர மேயர் அன்பழகன் மாவட்ட பொறுப்பாளர் வைரமணி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

நிகழ்வில் சங்க தலைவர் பழனிச்சாமி பொதுச் செயலாளர் குணசேகரன் பொருளாளர் அப்பாவும் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முன்னதாக மலைக்கோட்டை கிளை சங்க துணை செயலாளர் தர்மராஜ் வரவேற்புரை யாற்றினார். சங்கத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார், செயலாளர் துரைராஜ், பொருளாளர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *