திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் தமிழக தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி, புதுக்கோட்டை,அரியலூர் பெரம்பலூர்,நாகப்பட்டினம் தஞ்சாவூர்,திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர் – மேலும் இவர்களுக்கான முறையான பயிற்சிகளும் இன்று வழங்கப்படது.

இந்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டத்தில் பேசிய மாநில தேர்தல் ஆனையர் பழனிக்குமார் :

இந்த தேர்தலை சுமுகமாக,நியாமாக,எளிதாக நடத்துவது தான் இந்த கூட்டத்தின் பிரதான நோக்கம். அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு கொடுத்துள்ள பணிகளை நாம் சரியாக செய்ய வேண்டும்.ஜனவரி 21க்குள் நமக்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கி உள்ளது – அதற்குள் நாம் எப்படி சிறப்பாக நடத்தி முடிக்க போகிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.நமக்கு காலம் குறைவாக தான் உள்ளது – எனவே எவ்வளவு சிறப்பாக,சரியாக பணிகளை முடிக்க வேண்டுமோ அதை பொறுப்புடன் செய்ய வேண்டும்.பகுதி நீதி சார்ந்த பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *