திருச்சியில் பிரணவ் ஜுவல்லரி நகைக்கடை இயங்கி வருகிறது. இதில், மார்ட்டின் ஜெயராஜ் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் நகைக்கடை உரிமையாளர் இவரிடம் 75 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து, சென்னையில் இருந்து ஒன்றரை கிலோ நகையை வாங்கி வருமாறு கூறியுள்ளார். இந்நிலையில் சென்னை சென்ற மார்ட்டின் ஜெயராஜ் நகைகளை வாங்கி விட்டு அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பாக உரிமையாளருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெகுநேரமாகியும் மார்ட்டின் ஜெயராஜ் வராததால் உரிமையாளர் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேச முயற்சித்துள்ளார். அப்பொழுது போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது மேலும் சிறிது நேரம் காத்திருந்து மீண்டும் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என வந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சந்தேகத்தின் பெயரில் கார் ஓட்டுநரான பிரசாந்த் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னைக்கு பிரசாந்த் காரில்தான் மார்ட்டின் நகைகளை வாங்க சென்றது தெரியவந்தது. போலீசார் தொடர் விசாரணையில் கார் ஓட்டுநரான பிரசாந்த் நகைக்கு ஆசைப்பட்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து மார்ட்டின் ஜெயராஜை சென்னையிலிருந்து திருச்சி வரும் வழியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு மணச்சநல்லூர் காட்டுப்பகுதியில் உடலை குழிதோண்டி புதைத்தாக ஒப்புக்கொண்டான்.
மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த 6 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மணச்சநல்லூர் காட்டுப்பகுதியில் மாட்டின் உடல் இன்று காலை தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *