திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம் சார்பில் திருச்சியில் உள்ள முக்கிய கோவில்களான மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி, வெக்காளியம்மன் திருக்கோவில்களில் சிறப்பு பூஜைகள் இன்று நடத்தப்பட்டது. மேலும் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்கள் பார்வையற்ற அரசு பெண்கள் பள்ளி ஆகியவற்றில் அன்னதானங்கள் வழங்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர் மேலும் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு பராமரிப்புக்கான பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருச்சி மாநகர் மாவட்ட சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத்தின் தலைவர் சித்திக் செயலாளர் நாக கார்த்திக், பொருளாளர் ஆரிப், துணைத் தலைவர் மாரி, துணைச் செயலாளர் அசோக் மாநகர தலைவர் பொன்னர் செயலாளர் சரண் பொருளாளர் நவீன், துணைத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.