தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சூர்யா இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இன்று பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பது, அன்னதானம், இரத்ததானம், கல்வி உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட சூர்யா தலைமை இளைஞர் அணி ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். இந்த ரத்ததான முகாமிற்கு திருச்சி மாவட்ட சூர்யா தலைமை இளைஞர் அணி ரசிகர்கள் நற்பணி இயக்கத்தின் தலைவர் விக்னேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் சூர்யபிரகாஷ், பொருளாளர் முரளி -துணைத்தலைவர் ஆனந்த், துணைசெயலாளர் நீகால், துணைப்பொறுளாளர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் முதியவர்கள் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் சாலை ஓரத்தில் தங்கி இருக்கும் ஏழை எளிய முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் நடிகர் சூர்யாவுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

 மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அமைப்பாளர் விக்கி, துணை அமைப்பாளர் ஆதி மற்றும் நிர்வாகிகள் ஆண்ட்ரே, மகாபிரபு, மதன், விமல், சர்வேஷ், பாஸ்கர், பிரணவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *