நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த V3 திரைப்படத்தின் இயக்குனர் அமுதவாணன் கூறும் போது:

கற்பழிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் வேண்டும் மேலும் இதுபோல் இனி நடக்கக்கூடாது அதற்காக போராடுபவர் ஆடுகளம் நரேன் இவர் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் அப்பாவாக நடித்து இருக்கிறார் .மேலும் படத்தின் மூலம் இதற்கான தீர்வை சொல்லி உள்ளோம் இந்த தீர்வு பேசும் பொருள் ஆகும். இத்திரைப்படம் எந்த தனி சம்பவத்தையும் சார்ந்தது அல்ல இது சமுதாயத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்வின் சேகரிக்கப்பட்டு எடுக்கப்பட்டது குறிப்பாக உத்திர பிரதேசத்தில் தனது மகள் கற்பழிக்கப்பட்டதாக மகளின் தந்தை போலீசில் புகார் அளிக்கிறார் அவர் அடித்து கொள்ள படுகிறார் இப்படி பட்ட பல்வேறு சம்பவத்தை வைத்து படம் எடுத்துள்ளோம்

இத்திரைப்படத்தில் கற்பழிப்பு மட்டும் இன்றி அரசியல் எவ்வாறு இதில் உள்ளது என்பதை குறித்து இப்படம் பேசுகிறது. ஒரு சிஸ்டம் எது தவறு என்கின்றதோ அதையே அது சரி என்கிறது இது தான் இப்படத்தின் ஒன் லைன். இப்படத்தில் 760 பேர் நடித்துள்ளனர் 13 போராட்ட காட்சிகள் உள்ளது. இப்படத்திற்கு சென்சார் பெற ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளேன் இத்திரைப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு வார்த்தை உள்ளது அதற்காகவே படத்திற்கு A சான்றிதழ் கிடைத்துள்ளது குழந்தைகளுக்கு இந்த படம் எடுக்கவில்லை அடால்ட்-களுக்காக எடுக்கப்பட்டது இப்படம். சென்சார் மூலமாக சின்ன சின்ன வார்த்தைகள் இப்படத்தில் மாற்றப்பட்டுள்ளது. மேலும் டிரெய்லர் சென்சார்-க்கு அனுப்பி 20 நாள் மேல் ஆகிறது இன்னும் எனக்கு விடை கிடைக்கவில்லை. படத்தில் பிரமோஷனுக்காக டிரெய்லர் தியேட்டரில் இன்னும் வெளியிடவில்லை.

சென்சார் அதிகாரிகள் கதைக்கு தேவையாதை பார்க்கின்றனர் சென்சார் கமிட்டியினர் தனி நபரை தாக்குகிறதா , மாநிலத்தை தாக்குகிறது என பார்க்கின்றனர் மேலும் படத்தில் ஒரு காட்சியின் பின்னால் ஒரு முன்னாள் தலைவரின் படம் இருந்ததால் அதை எடுக்க செல்கின்றனர். மேலும் நான் சொன்ன விஷயத்தை தமிழ் சினிமா ஆங்காங்கே பேசி உள்ளது பாலிவுட் சினிமா பேசி உள்ளது என கூறியும் இங்கு நாங்கள் அப்படிதான் என கூறினார் எனவே அதை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்றார். இத்திரைப்படத்தில் ராதிகா ஆப்தே நடிப்பதாக இருந்தது அவர் சம்பளம் அதிகம் என்பதால் சாய் பல்லவி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டனர் ஆனால் நேரம் இன்மை காரணமாக வரலட்சுமி அவர்களை அணுகி நடிக்க வைத்தோம் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *